கோவைக்கு சும்மா பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒருநாள் முன்னதாகக் கிளம்பிச்சென்றேன். ஜனவரி இருபத்தொன்றாம்தேதி இரவு எட்டரை மணிக்கு ரயில். ஆனால் என் மின்பயணச்சீட்டில் நேரம் இருக்கவில்லை. எட்டு என்று நினைத்துக்கொண்டேன். பகலெல்லாம் வேலை. துணிகளை இஸ்திரி போட்டேன். எனக்கும், பையனுக்கு நான்குநாட்களுக்கும். பெட்டிக்குள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். அத்துடன் பல்வேறு விஷயங்களை எழுதிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு சினிமாவுக்கு, இரு மலையாளச் சிற்றிதழ்களுக்கு. மலையாளத்தில் இன்று சிற்றிதழுக்கான தேவையே இல்லை என்று மலையாளிகள் எண்ணினாலும் பிடிவாதமாக சிலர் நடத்துகிறார்கள். அவர்களை ஆதரிப்பது என்Continue reading “கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – ஜெயமோகன்”
Monthly Archives: January 2010
கோவை சந்திப்பு குறித்த ஜெயமோகன் பதிவு
கோவையில்… காலை பத்தரை மணிக்கு அன்னலட்சுமி ஓட்டலின் மாடியில் உள்ள சந்திப்பு அறையில் மதிய உணவும் உரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. உண்மையில் ஒரு சின்ன சந்திப்புதான் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக அதிகரிக்க அதிகரிக்க அதை விரிவுபடுத்த வேண்டியிருந்தது. அன்னலட்சுமியில் பதினொரு மணிக்கு கிட்டத்தட்ட நாற்பதுபேர் வந்துவிட்டிருந்தார்கள். கோவையின் முக்கியமான கலாச்சார இயக்கமான கோணங்கள் திரைப்பட இயக்கத்தில் இருந்து நண்பர்கள் வந்தார்கள். ஆனந்த் தமிழினியில் சினிமா பற்றி எழுதுகிறார். தியாகராஜன் அவர்களின் தியாகு புத்தகநிலையம் கோவையில்Continue reading “கோவை சந்திப்பு குறித்த ஜெயமோகன் பதிவு”
ஜெயமோகன் – வாசகர்கள் சந்திப்பு – கோவை
கோவையில் ஜனவரி 23 , 2010 அன்று ஜெயமோகன் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் இது. நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள். இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் ரோடு) ,பூமார்க்கட் ,வடகோவை . மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி அழைப்பிதழ்.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – அறிமுகம்
எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , உலகெங்குமுள்ள , பெரும்பாலும் இணையத்தால் இணைந்த நண்பர்கள் ஒன்று கூடியபோது பொதுவான ஆர்வம் ஜெயமோகனின் எழுத்துக்களாக இருக்கக் கண்டோம் , முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது. அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும்Continue reading “விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – அறிமுகம்”