கலாப்பிரியா நிகழ்ச்சி – கவிஞர் வா.மணிகண்டன்

கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள் – சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=8451 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன். என்னிடம் கலாப்ரியாவின் வனம்புகுதல்,அனிச்சம் இரண்டு தொகுப்புகள்தான் இருந்தன. கவிதைகளின் மொத்தத் தொகுப்பு இல்லை. மொத்தத் தொகுப்பு காவ்யா பதிப்பகத்தில் ஒன்று வந்திருக்கிறது. தமிழினி பதிப்பகத்தில் இருந்து இன்னொன்று. ஆனால் இரண்டுமே இப்பொழுதுContinue reading “கலாப்பிரியா நிகழ்ச்சி – கவிஞர் வா.மணிகண்டன்”

கலாப்பிரியா நிகழ்சி – செல்வேந்திரனின் குறிப்புகள்

http://selventhiran.blogspot.com/2010/05/blog-post_11.html பெற்றியார்ப் பேணிக் கொளல்! தீவிரமான வாசிப்பு, தொடர்ந்த உரையாடல்கள் இரண்டின் மூலமும் ‘இலக்கிய வாசகனெனும்’ அந்தஸ்தினை அடையத் துடிக்கும் அரங்கசாமி, அருண், சந்திரகுமார் இவர்களோடு நானும் சேக்காளி. நாங்கள் நால்வரும் நேர்கோட்டில் சந்திப்பது ஜெயமோகன் எனும் ஒற்றைப் புள்ளியில். முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது. அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும்Continue reading “கலாப்பிரியா நிகழ்சி – செல்வேந்திரனின் குறிப்புகள்”

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – ஒரு விளக்கம்

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பு நீங்கள் நடத்துவதா? அதனுடன் உங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? உங்கள் இணையதளத்தில் அதற்கு அளிக்கப் பட்டுள்ள இடம் காரணமாக இந்த வினாவைக் கேட்கிறேன் சிவம் அன்புள்ள சிவம், சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப் பட்டது. அந்தContinue reading “விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – ஒரு விளக்கம்”

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு – ஜெயமோகன் விளக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது. ஆகவே அந்த நிதியைக்கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தContinue reading “விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு – ஜெயமோகன் விளக்கம்”

கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்

நண்பர்களே , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது , இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் . படைப்பாளிகள் ஜெயமோகன் , சுகுமாரன் , மரபின் மைந்தன் , வெண்ணிலா, வா.மணிகண்டன் , ஆகியோர் கலந்துடையாடுகின்றனர் , நாஞ்சில்Continue reading “கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்”