ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்கு சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .
இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.
மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் . அச்சடிக்க உதவிய தமிழினி பிரசுரத்திற்கு நன்றிகள் .
யானைடாக்டரின் நண்பர்கள் நடத்திய நினைவுகூறல் நிகழ்ச்சியில் அவர்கள் 1000 புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளார்கள் . இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது)
அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , vishnupuram.vattam@gmail.com தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனகாப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .
யானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள
English version is at :
Chapter 1 : http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm
Chapter 2 : http://www.albanytamilsangam.org/vishvesh/ED_2.htm
Chapter 3 : http://www.albanytamilsangam.org/vishvesh/ED_3.htm
The original in Tamil is at:
Chapter 1 : http://www.jeyamohan.in/?p=12433
Chapter 2 : http://www.jeyamohan.in/?p=12435
Chapter 3 : http://www.jeyamohan.in/?p=12439
‘The Elphant Doctor’ – PDF: https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B_jsizJQnTKCZjE3NzFmMDItZDI0YS00YmI4LTlmN2ItNWNlMGQ1N2UwNjUy&hl=en_US
கட்டுரையை எனது வலைப்பூவில் மறுபதிப்புச் செய்யலாமா? ஆம் எனில் தெரியப் படுத்துங்கள். அன்புடன், ஜெயக்குமார்
செய்யலாம் , பதிப்புரிமை போன்ற எதுவும் இல்லை நண்பரே
ஐயா,
நான் ‘யானை டாக்டர்’ இலவச கட்டுரை பிரதிகளை கல்லூரியில் படிக்கும் எனது மகளின் வகுப்பு தோழர் / தோழிகளுக்கு பரிசாக வழங்க விரும்புகிறேன் அதை பெற என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவித்தால் மிகவும் அன்புடையவனாக இருப்பேன்.
அ.சேஷகிரி