All posts by As

விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,

இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.

விஷ்ணுபுரம் விருது 2011

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

 

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

யானை டாக்டர் சிறுகதை – இலவச புத்தகம் அச்சில்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்கு சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .

இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.

மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் . அச்சடிக்க உதவிய தமிழினி பிரசுரத்திற்கு நன்றிகள் .

யானை டாக்டர்

யானைடாக்டரின் நண்பர்கள் நடத்திய நினைவுகூறல் நிகழ்ச்சியில் அவர்கள் 1000 புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளார்கள் . இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது)

அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , vishnupuram.vattam@gmail.com தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனகாப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .

 

யானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள 

English version is at :

Chapter 1 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm

Chapter 2 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_2.htm

Chapter 3 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_3.htm

The original in Tamil is at:

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

தேவதேவன் கவிதை அரங்கு – திற்பரப்பு

கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று திற்பரப்பு அருவி – நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது

27 -2-2011 மற்றும் 28 -2-2011 இரண்டு நாட்கள் நடந்தது .

ஜெயமோகன் , யுவன் சந்திரசேகர் , மோகனரங்கன் இவர்களுடன் கவிஞர் தேவதேவன் கலந்துகொண்டார் , மேலும் 25 நண்பர்கள் பங்குகொண்டனர் .

 

நிகழ்ச்சி குறித்த பதிவு –திற்பரப்பு

புகைப்படங்கள் – https://picasaweb.google.com/vishnupuram.vattam/DevadevanTitparapu#

நாஞ்சில் விழா – சென்னை -பதிவுகள்

இந்த வருடத்திற்க்கான சாகித்யஅகாடமி விருது “சூடிய பூ சூடற்க” தொகுப்பிற்க்காக நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது , ஜனவரி 3 – 2010 அன்று நாஞ்சில்நாடன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பாராடுவிழா நடத்தியது . அது குறித்தான பதிவுகள் . 

 

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள் – ஜெயமோகன்

சுரேஷ்கண்ணன்

வேழவனம்

புகைப்படங்கள் முழுத்தொகுப்பு புகைப்படங்களின் முழுத்தொகுப்பு

நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவு பத்ரியின் வீடியோ பதிவு

தேனம்மை லெக்ஷ்மணன்

பாலபாரதி | விடுபட்டவை

கிரி