Category Archives: அறிவிப்பு

விஷ்ணுபுரம் விருது 2013 – விழா அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அனைவரையும் அன்போடு அழைக்கிறது
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அனைவரையும் அன்போடு அழைக்கிறது

விஷ்ணுபுரம் விருது 2013

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.

விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது.

இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது

தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.

தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்

இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ உழைக்கப் பிறந் தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.

தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல்சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு .இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப்பதிப்பாக வெளியிடவிருக்கிறது.

தெளிவத்தை ஜோசப்- இளவயதில்

தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்

1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)

*

பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.

இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. ரூ ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும்.

இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார்.

மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார்.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் , இயக்குநர் பாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.

வழக்கம்போல இது ஒரு இரண்டுநாள் இலக்கியக் கொண்டாட்டம். சனியன்றே நண்பர்கள் கூடுவார்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களுடன் இளம் படைப்பாளிகளும் இருப்பார்கள். அவர்களுடனான சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து இரவெல்லாம் நடக்கும்.

அனைவரும் வருக.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்.

தொடர்புக்கு: vijayaragavan.victory@gmail.com

தொடர்புடைய பதிவுகள்:

தெளிவத்தை ஜோசப் பற்றிய மேலதிக இணைய வாசிப்புக்கு

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது(2013) – டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

TOI news1

விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,

இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.

விஷ்ணுபுரம் விருது 2011

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

 

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

யானை டாக்டர் சிறுகதை – இலவச புத்தகம் அச்சில்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்கு சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .

இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.

மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் . அச்சடிக்க உதவிய தமிழினி பிரசுரத்திற்கு நன்றிகள் .

யானை டாக்டர்

யானைடாக்டரின் நண்பர்கள் நடத்திய நினைவுகூறல் நிகழ்ச்சியில் அவர்கள் 1000 புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளார்கள் . இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது)

அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , vishnupuram.vattam@gmail.com தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனகாப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .

 

யானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள 

English version is at :

Chapter 1 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm

Chapter 2 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_2.htm

Chapter 3 :  http://www.albanytamilsangam.org/vishvesh/ED_3.htm

The original in Tamil is at:

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011

எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது .

nanjil-fun

நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30

இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா
ஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்வாழ்த்துரை :

இயக்குனர் பாலா

எழுத்தாளர் ஞாநி

ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

எழுத்தாளார் சு.வெங்கடேசன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

எழுத்தாளர் ஜெயமோகன்

நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி
ஏற்புரை – நாஞ்சில்நாடன்நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன்

எதிர்பார்க்கிறோம்.