Category Archives: இலக்கியம்

விஷ்ணுபுரம் விருது 2013

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.

விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது.

இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது

தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.

தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்

இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ உழைக்கப் பிறந் தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.

தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல்சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு .இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப்பதிப்பாக வெளியிடவிருக்கிறது.

தெளிவத்தை ஜோசப்- இளவயதில்

தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்

1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)

*

பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.

இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. ரூ ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும்.

இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார்.

மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார்.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் , இயக்குநர் பாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.

வழக்கம்போல இது ஒரு இரண்டுநாள் இலக்கியக் கொண்டாட்டம். சனியன்றே நண்பர்கள் கூடுவார்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களுடன் இளம் படைப்பாளிகளும் இருப்பார்கள். அவர்களுடனான சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து இரவெல்லாம் நடக்கும்.

அனைவரும் வருக.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்.

தொடர்புக்கு: vijayaragavan.victory@gmail.com

தொடர்புடைய பதிவுகள்:

தெளிவத்தை ஜோசப் பற்றிய மேலதிக இணைய வாசிப்புக்கு

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது(2013) – டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

TOI news1

Advertisements

நாஞ்சில் விழா – சென்னை -பதிவுகள்

இந்த வருடத்திற்க்கான சாகித்யஅகாடமி விருது “சூடிய பூ சூடற்க” தொகுப்பிற்க்காக நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது , ஜனவரி 3 – 2010 அன்று நாஞ்சில்நாடன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பாராடுவிழா நடத்தியது . அது குறித்தான பதிவுகள் . 

 

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள் – ஜெயமோகன்

சுரேஷ்கண்ணன்

வேழவனம்

புகைப்படங்கள் முழுத்தொகுப்பு புகைப்படங்களின் முழுத்தொகுப்பு

நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவு பத்ரியின் வீடியோ பதிவு

தேனம்மை லெக்ஷ்மணன்

பாலபாரதி | விடுபட்டவை

கிரி


விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு

முதல் வருடம் என்றாலும் நண்பர்களின் உதவியோடு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது , மிகுந்த மன நிறைவோடு இருக்கிறோம் .

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் படைப்பாளார்களுடன்…

விருது நிகழ்ச்சி குறித்தான் பதிவுகள் – தொகுப்பு இங்கே .

ஜெயமோகன் : http://www.jeyamohan.in/?p=10869

http://www.jeyamohan.in/?p=10939

http://www.jeyamohan.in/?p=10887

சுசீலா அம்மா : http://www.masusila.com/2010/12/1.html

http://www.masusila.com/2010/12/2.html

இப்படிக்கு இளங்கோ : http://ippadikkuelango.blogspot.com/2010/12/blog-post_23.html

 

கார்த்திகைப் பாண்டியன் : http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/12/2010.html

கோபி : http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_20.html

விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்தி http://www.dinamani.com/edition/story.aspx?artid=349061&SectionID=141&MainSectionID=141&SectionName=Cinema&SEO=

விஷ்ணுபுரம் விருதுவிழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி

http://timesofindia.indiatimes.com/city/chennai/New-award-holds-hope-for-lesser-known-writers/articleshow/7130315.cms

புகைப்படங்கள் சிறில் அலெக்ஸ் : http://picasaweb.google.com/cyril.alex/VishnupuramAward#

விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , முதல் நிகழ்வாக ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு கோவையில் நடத்தப்பட்டது , அடுத்ததாக கலாப்பிரியாவின் 60 அகவை நிறைவை முன்னிட்டு கலாப்பிரியா படைப்புக்களம் நிகழ்ச்சியும் கோவையில் நடத்தப்பட்டது , உதகையில் ஒரு கூடுகை நடத்த ஜெயமோகன் எண்ணிய போது ஒருங்கிணைக்க நண்பர்கள் உற்சாகமாக முன்வந்தனர்,

மிக நீண்ட விவாதங்களின் வழியாக இலக்கிய விருதுகள் கவுரவிக்க தவறிய தமிழ் இலக்கிய முன்னோடிகள் குறித்தும் , அவர்களின் பங்களிப்பு குறித்தும் ஜெயமோகன் தன் வருத்தங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார் ,

இதுவரை நடத்திய நிகழ்சிகள் தந்த உற்சாகத்தில், நண்பர்கள் இணைந்து ஒரு விருதை ஏற்படுத்த முனைந்தோம் , நீண்ட ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு அதற்க்கு ஜெயமோகனின் ஒப்புதல் கிடைத்தது ,

1. விருது “விஷ்ணுபுரம் விருது” என்ற பெயரால் வழங்கப்படும்

2. வருடம் ஒரு இலக்கிய படைப்பாளிக்கு படைப்புக்காக அல்லது வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும்

3. தற்பொழுது விருதுடன் ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்பட உள்ளது , நண்பர்களின் பங்களிப்பை பொறுத்து தொகை உயரக்க்கூடும்

4.  விருதுக்குரியவரின் தேர்வு ஜெயமோகன் அவர்களால் மட்டுமே செய்யப்படும்

5. விருது வழங்கும் விழா ஜெயமோகனின் பங்களிப்போடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படும்.

6. விருது விழாவின் போது விருதுக்குரியவரை பற்றிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்படும்.

 

தொடர்புக்கு : vishnupuram.vattam@gmail.com +91 94421 10123

அடுத்தது என்ன ?

ஜெயமோகன் அவர்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகள்:

http://www.jeyamohan.in/?p=8778

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் வருடத்தில் ஒரு இலக்கியவிருது அளிக்க நினைக்கிறோம். பொதுவாக நம்சூழல் கவனிக்காமல் விட்டுவிட்ட இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பதே நோக்கம். இவ்வருடம் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் விழா அமையும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். பரிசு இப்போதைக்கு ஐம்பதாயிரம் ரூபாய். அது ஒரு விழாவில் அளிக்கப்படும். அந்த ஆசிரியரைப்பற்றி நான் ஒரு சிறு நூலையும் எழுதி வெளியிடுவேன்.

நண்பர் அரங்கசாமிதான் இதில் பெரிய ஆர்வத்துடன் இருக்கிறார். இதைத்தவிர சில இலக்கியச் சந்திப்புகளை நிகழ்த்தலாமென எண்ணம். இனிமேல் இலக்கியக் கூட்டங்கள் தேவையில்லை என நினைக்கிறேன். காரணம், அவை உரையாடலையும் பரஸ்பர நட்பையும் சாத்தியமாக்குவதில்லை. அத்துடன் அப்படிக் கூடுவது வெறும் அரட்டையாக அல்லாமல் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

சென்னை மாதிரி நகரம் ஒன்றில் தேவதேவன் கவிதைகளைப்பற்றி ஒரு முழுநாள் விவாத அரங்கு ஏற்பாடு செய்தாலென்ன என நினைக்கிறேன். அவரது 50 கவிதைகளை வாசித்து விவாதித்து அவரிடம் ஒரு விவாதம். ஒருநாளில் மூன்று அரங்கங்களிலாக. அது நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் உதவும். நானும் பிறரைச் சந்திக்கலாம். நாஞ்சில்நாடன் ஆக்கங்களைப்பற்றியும் ஒரு சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம்.

என்னையோ என் ஆக்கங்களையோ முன்வைத்து கூட்டங்களை நான் நிகழ்த்துவதில்லை. நம் முன்னோடிகளே இன்னமும் அதிகமாகப் பேசப்படாதபோது அது அழகல்ல. ஜனவரியில் எப்படியும் சந்திப்போம். முடிந்தால் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையில் அல்லது மதுரையில் நிகழ்த்தலாம்.

இவற்றுக்கான நிதியாதாரங்களை நண்பர்களிடமிருந்தே பெறுகிறேன். நிபந்தனைகள் ஏதும் விதிக்காத வாசக நண்பர்கள். ஓரளவு என் பணம். எதையாவது செய்யவேண்டுமென்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. நிர்வாக விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது சிலவற்றுக்கு துணிகிறேன்

ஜெ