பாலசந்திரன் சுள்ளிக்காடு: விஷ்ணுபுரம் விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இம்முறை மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கலந்துகொள்கிறார். வரலாற்றில் அபூர்வமாக மிக இளம் வயதிலேயே சில கவிஞர்கள் ஒரு பண்பாட்டை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்கள். அப்பண்பாட்டின் முந்தையதலைமுறைகளிடம் பாரம்பரியத்திடம் இளையதலைமுறைக்கு என்னென்ன சொல்வதற்கிருக்கிறதோ அனைத்தையும் அவர்கள் வழியாக வெளிப்படுத்துகிறது காலம். அவ்வாறு விதியால் தேர்வுசெய்யப்பட்ட கவிஞன் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு மரணமில்லை. இன்னொரு வகையில் சபிக்கப்பட்டவன், தன் காலகட்டத்தின் அனைத்து வலிகளையும் அவன் அனுபவிக்கிறான். உலக இலக்கியத்தில் அவ்வாறு இளமையின் அனலை குரலில் ஏந்தி வந்தContinue reading “பாலசந்திரன் சுள்ளிக்காடு: விஷ்ணுபுரம் விழா 2013 சிறப்பு விருந்தினர்”

இந்திரா பார்த்தசாரதி :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொள்கிறார். தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகளில் ஒருவர் இ.பா இந்திரா பார்த்தசாரதி நவீனத்தமிழிலக்கியம் உருவான நாள் முதல் அதற்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. அதன் முன்னோடிப்பெரும்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே கிராமங்களை, அல்லது சிறுநகரங்களைச் சார்ந்தவர்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற சிலர் முழுவாழ்க்கையையும் பெருநகரில் கழித்தவர்கள், ஆனால் பெருநகர் வாழ்க்கையை அவர்கள் எழுதவில்லை. பெருநகர்வாழ்க்கையைப்பற்றிய கிராமத்தானின் விலகலும் விமர்சனமுமே அவர்களின் படைப்புகளில் இருந்தது. இன்னொருபக்கம் பெருநகர் வாழ்க்கையை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் அவரதுContinue reading “இந்திரா பார்த்தசாரதி :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்”

தெளிவத்தை ஜோசப் படைப்புகள் – விமர்சனங்கள்

’மீன்கள்’ சிறுகதை – தெளிவத்தை ஜோசப் என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் , விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத்தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும்துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது – ஜெயமோகன் உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70) – பாவண்ணன் ’மனிதர்கள் நல்லவர்கள்’ – சிறுகதை ‘மழலை’ –Continue reading “தெளிவத்தை ஜோசப் படைப்புகள் – விமர்சனங்கள்”

விஷ்ணுபுரம் விருது விழா 2013 – தொடர்பு உதவிக்கு

விஷ்ணுபுரம் விருது விழா 2013 உதவிக்கு முக்கிய தொடர்புகளும் எண்களும்  விழா நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு: அரங்கசாமி ((9894033123) செல்வேந்திரன் (9003931234) விஜயராகவன் ( 98430 32131) ஸ்ரீனிவாசன் (9884377787) விருந்தினர்கள் தங்குமிடம்/உபசரிப்பு/நிர்வாகம்/வழி மற்றும் உதவிகளுக்கு சேலம் ப்ரசாத் (9500940750) விஜய் சூரியன் (99658 46999) தகவல்கள் மெயில்/மொபைல் வழி பெற/பதிய சுனீல் க்ருஷ்ணன் (9994408908) (drsuneelkrishnan@gmail.com) சுந்தரவடிவேலன் (9663711552) (sundaravadivelan.s@gmail.com) உணவு உபசரிப்பு/நிர்வாகம் ராஜமாணிக்கம் (7200855666) ராதாக்ருஷ்ணன் (9791764422) சிறப்பு விருந்தினர் வரவேற்பு/நிர்வாகம் ஷிமோகா ரவிContinue reading “விஷ்ணுபுரம் விருது விழா 2013 – தொடர்பு உதவிக்கு”

ஏற்காடு இலக்கியமுகாம் 2013 – சுனில் கிருஷ்ணன்

ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது இவ்வாண்டு ஏற்காடு நிகழ்வு. மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விஜயராகவன் சார், பிரசாத், சதீஷ் போன்ற நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உணவு ஏற்பாடு அற்புதம். இந்த ஆண்டு புதிய நண்பர்கள் பலரின் அறிமுகம் கிட்டியது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஆண்டுக்காண்டு கூடி வருவதாகவே தோன்றுகிறது. பிரகாஷ்Continue reading “ஏற்காடு இலக்கியமுகாம் 2013 – சுனில் கிருஷ்ணன்”