ஏற்காடு இலக்கிய முகாம் – 2013 – எம்.ஏ.சுசீலா

இலக்கிய நிழலடியில் -2013 – எம்.ஏ.சுசீலா ’’தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய….ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது….’’ இலக்கிய நிழலடியில் ..என்ற தலைப்பில் சென்ற ஆண்டு -2012- ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களைக்கொண்ட எங்கள் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நடத்திய இலக்கியக்கூடல் பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதில், ’’கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டுContinue reading “ஏற்காடு இலக்கிய முகாம் – 2013 – எம்.ஏ.சுசீலா”

கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு 2013 – ஜெ

சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் பதில் சொன்னார். அப்போது நண்பர் ராம் கல்பற்றா நாராயணனுக்காக ஒரு கவிதையரங்கு ஏற்பாடுசெய்யவேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தேவதேவன், எம்.யுவன் ஆகியோருக்குக் கவிதை வாசிப்பரங்குகளை அமைத்திருந்தோம். பல இடங்களில் இடம்தேடி கடைசியில் ஆலப்புழாவில்Continue reading “கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு 2013 – ஜெ”

விஷ்ணுபுரம் விருது 2012 – விழா நிகழ்வுகள்

2012 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி கவிஞர் தேவ தேவன் அவர்களுக்கு 22.12.2012 அன்று கோவை ஆர். எஸ். புரம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளையராஜா, மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ,விமர்சகன் மோகனரங்கன், விமர்சகர்கள் மோகனரங்கன், ராஜகோபாலன் ,திரைப்பட இயக்குநர் சுகா ,எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். செல்வி வானதிஸ்ரீ,செல்வி வித்யாலட்சுமி ஆகியோரின் கடவுள் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளார்Continue reading “விஷ்ணுபுரம் விருது 2012 – விழா நிகழ்வுகள்”

விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு – ஜெயமோகன்

ஊட்டியில் குரு நித்யா ஆய்வரங்கு நடத்த எண்ணியபோது நண்பர்கள் பலர் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றி ஒன்றோ இரண்டோ அரங்குகள் நடத்தவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் அனைவருமே விஷ்ணுபுரம் நாவலை அப்போது மறுமுறை வாசித்துக்கொண்டிருந்தார்கள், ஒருவரோடொருவர் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் அந்நாவலின் தொன்மப்பின்புலம், தத்துவ விவாதம் சார்ந்த ஐயங்கள் இருந்தன. ஆனால் நித்யா ஆய்வரங்கில் அப்படி ஒரு அமர்வு நடத்தப்பட்டால் அது பிறரால் குறைகூறப்பட வழிவகுக்கும் என கிருஷ்ணன் சொன்னார். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டோம். ஆனால் அப்படி ஓர் அரங்கு நிகழ்ந்தே ஆகவேண்டும்Continue reading “விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு – ஜெயமோகன்”