விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம்Continue reading “விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை”

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014

நண்பர்களே 2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 அன்று கோவையில் விழா நிகழும். 27முதல் கருத்தரங்குகள், சந்திப்புகள் என ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் .இடம் பங்கேற்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். மபொசியின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். எழுபதுகளில் வெளிவந்த இவரது அன்றுவேறு கிழமை என்ற கவிதைத்தொகுதி ஒரு பெரிய அலையை கிளப்பியது.Continue reading “கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014”

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014

வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்த பாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும்Continue reading “வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014”

SBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி

விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு SBS வானொலிக்கு தெளிவத்தை ஜோசப் அவர்கள் வழங்கிய பேட்டியின் ஒலிப்பதிவு http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/300933/t/-I-couldn-t-have-done-it-without-her-support/in/english            

விஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்

விழாவை ஒட்டி வெளியான வசைகளுக்கு ஜெயமோகனின் விளக்கம் நாளை மறுநாள் [ டிசம்பர் 22 ] அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் நாளை [21] அன்று காலை கோவையில் வந்திறங்குகிறேன். சென்றவருடம் போலவே வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒரு கல்யாணமண்டபம் ஏற்பாடாகியிருக்கிறது. குறைந்தவசதிகளுடன் கூட்டமாக பொதுக்கூடத்தில் தங்கி இரவெல்லாம் பேசுவதுதான் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பியல்பாக இதற்குள் ஆகிவிட்டிருக்கிறது. இம்முறையும் அதுவே விழாவைப்பற்றி சென்றமுறையெல்லாம் வந்ததுபோன்ற வசைகள் வரவில்லையே , அது ஒருகுறையாகவேContinue reading “விஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்”