விஷ்ணுபுரம் – செல்வேந்திரன் பதிவு

http://selventhiran.blogspot.com/2010/12/blog-post.html

இடையறாத வாசிப்பு, அறிவார்த்தமான விவாதங்கள், தொடர்ந்த பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகன் எனும் அந்தஸ்தினை அடையத் துடிக்கும் நல்லிலக்கிய ஆர்வலர்கள் நாங்கள். சமகால எழுத்தாளர்களில் முதன்மையானவரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக தரமான படைப்பாளிகளைத் திறந்த மனதுடன் தமிழ் வாசகப் பரப்பிற்குச் சிபாரிசு செய்பவரும், தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இரண்டாம் தர எழுத்துக்களை துணிச்சலுடன் விமர்சனம் செய்து வருபவரும், வேறெந்த எழுத்தாளர்களைக் காட்டிலும் வாசக உரையாடலை அதிகம் ஊக்குவிப்பவருமான ஜெயமோகன் எங்களின் ஆதர்ஸமாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நாங்கள் ஜெயமோகனின் வழியாகவே இம்மொழியின் உன்னதச் செயல்பாட்டாளர்களைக் கண்டடடைந்தோம் எனச் சொல்வதில் எங்களுக்கு கூச்சம் இல்லை.

தகுதியானவர்களுக்கு உரிய மற்றும் உயரிய மரியாதை என்பதில் கறாரானாவர் ஜெயன். அதன்படியே தமிழின் சிறந்த ஆளுமைகள் பலருக்கும் தன் சொந்தச் செலவில் விழாக்கள் பல எடுத்தவர் அவர். ஜெயமோகன் துவக்கிய அவ்வறப்பணியை அவரது தீவிர வாசகர்களாக நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

மனதிற்குள் புகுந்து மாயம் பண்ணுகிற மகத்தான கதைசொல்லி ஆ.மாதவன். சிறுகதைகளாலும், நாவல்களாலும் இம்மொழிக்கு அழகு செய்த மூத்த படைப்பாளி. இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை. விருது லாபிக்களில் விருப்பம் கொள்ளாத ஆத்மா. இத்தகைய புறக்கணிப்புகள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டிற்கான விருதை வழங்கி தனக்கான கவுரவத்தை தேடிக்கொள்கிறது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’

இவ்விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை – பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். இவ்விழாவில் ஆ.மாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர் ஒருவரை வாழ்த்த வாருங்களென இலக்கிய அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

***
http://selventhiran.blogspot.com/2010/12/blog-post.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s