ரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஈரோடு விஜயராகவன் , செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன், மற்றும் க.மோகனரங்கன் ஆகியோருடன் இணைந்து மொழியாக்கம் செய்த ”ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு”காலச்சுவடு க்ளாசிக் பதிப்பாக வெளிவரவுள்ளது. வெளியீட்டு விழா 28.12.13 அன்று சென்னையில் திருவான்மியூர்  Spaces அரங்கில்  நடைபெறவுள்ளது. அனைவரும் வருக. Raymond Clevie Carver, Jr.

பாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இயக்குநர் பாலா கலந்துகொள்கிறார். நான் கடவுளுக்காக பாலா பிரதீபா பட்டீலிடம் விருது வாங்கும் புகைப்படத்தைப் பார்த்து நான்கேட்டேன் ‘கண்ணப்பாத்தாலே தெரியுதே பாலா, ஜனாதிபதி விருதைக்கூட காலாள்படையா நின்னு வாங்கக்கூடாதா? குதிரமேல ஏறித்தான் போகணுமா?’ ‘சேச்சே…குதிரைல்லாம் இல்ல’ என்று அவசரமாக மறுத்தார் பாலா. ‘இது வேற ….இது காத்து…வோட்காவுக்கு ஸ்மெல்லே கெடையாது…’ யோசித்துப்பார்க்கையில் அப்படி பாலா செல்வதுதான் இயல்பு என்று படுகிறது. இந்தியதேசியத்தின் உச்சியில் நிற்கும் ஒருவரின் முன் பாலா நிற்கையில் இந்தியாவின் கடைக்கோடிக்Continue reading “பாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்”